இலங்கை பிரதான செய்திகள்

ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான ரி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா ஒரேயொரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் 3 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. குயின்டன் டி கொக் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று ஒரேயொரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் ஃபபியன் அலன் சிக்சர் அடித்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் வெற்றிபெற இயலவில்லை. போட்டியின் நாயகனாக 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுக்களை முக்கிய தருணத்தில் வீழ்த்திய தென்னாபிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் ரி-20 தொடரில் தென்னாபிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான நான்காவதும் தொடரின் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதுமான ரி-20 போட்டி நாளையதினம் நடைபெறவுள்ளது.

Related posts

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாத சந்ததியை உருவாக்க அரசாங்கம் முயற்சி

admin

யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

Rajith

கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீள ஆரம்பிக்க ஏற்பாடு

admin

Leave a Comment