இந்தியா சினிமா

துருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி முடிவு

விக்ரம் நடிப்பில் மிகபெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

பார்த்திபன், ராதிகா, ரீத்துவர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தை 2018ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், பல பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

அதன்பின், 2020ல் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா தாக்கத்தினால் வெளியிடமுடியவில்லை.

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால், படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் காட்சிகள் நான்கரை மணி நேரம் ஓடக்கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே துருவ நட்சத்திரம் படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related posts

30 கோடிக்கு விலைபோன ‘தளபதி 63’ திரைப்படம்

admin

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் போர் பதற்றம்! நட்சத்திர வீரரின் வேண்டுகோள்

admin

ரஜினியின் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு!

admin

Leave a Comment