விளையாட்டு

ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம், மனு சாவ்னியை உடன் அமுலாகும் வகையில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் வியாழக்கிழமை நடந்த அவசர கூட்டத்தில் வாரியம் இந்த முடிவை எடுத்தது.

இந்த முடிவு முறையான வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவில்லை, ஆனால் குழுவில் உள்ள எந்தவொரு பணிப்பாளரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது.

இதற்கிடையில், ஐ.சி.சி வாரியத்துடன் நெருக்கமாக பணியாற்றும் தலைமைக் குழுவின் ஆதரவுடன் செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் கடமைகளை பெறுப்பேற்பார் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

சக ஊழியர்களுடனான “சிராய்ப்பு நடத்தை” குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சாவ்னி மார்ச் மாதம் “விடுப்பில்” அனுப்பப்பட்டார்.

இந் நிலையில் தன்னுடைய வழக்கை ஒரு சுயாதீன நெறிமுறைகள் தீர்ப்பாயத்தால் விசாரிக்கக் கோரி சாவ்னி புதன்கிழமை எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடிதத்தில், அவர் ஐ.சி.சி மற்றும் அதன் தலைவர் பார்க்லே மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Related posts

அனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி!

admin

வீதிப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் புதிய வகை கிரிகெட் தொடர்

admin

உலகக் கிண்ணத் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வெற்றியுடன் முடிப்பதே எமது திட்டம்: கருணாரத்ன

admin

Leave a Comment