உலகம்

ரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்

ரஷ்யாவிலிருந்து இடம்பெறும் இணையவழி தாக்குதல்களைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அமெரிக்கா நிச்சயம் முன்னெடுக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, நேற்றைய தினம் இருவருக்கும இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் சுமார் 1,500 நிறுவனங்கள் முடக்கப்பட்டமை உள்ளிட்ட அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இணைய தாக்குதல் குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு! பின்னணியில் நடந்தது என்ன?

admin

மனுஸ்தீவில் தற்கொலைக்கு முயன்றார் சூடான் அகதி

admin

அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய பெண்ணை பரிந்துரை செய்த ஜோ பைடன்..!

Rajith

Leave a Comment