உலகம்

ரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,818 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி அங்கு கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 57 இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய ரஷ்யாவில் இதுவரை தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5,707,452 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட்-19 தொற்றுக்காரணமாக ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 734 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140,775 ஆக அதிகரித்துள்ளது.

உலகளாவிய ரீதியாக கொவிட்-19 தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோடை காலத்தின் உல்லாசப்பயணம் ஆரம்பம்!

admin

மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு

admin

ஹங்கேரி படகு விபத்து – விசாரணைக்கு உத்தரவு

admin

Leave a Comment