இலங்கை பிரதான செய்திகள்

மேலும் 2 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி

சீனாவில் தயாரிக்கப்பட்ட சீனாபோர்ம் கொவிட்-19 தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக 2 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்ளூடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

பீஜிங்கிலிருந்து தடுப்பூசி அளவுகளுடன் புறப்பட்ட இந்த விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை 5.10 மற்றும் 5.40 மணிக்கு தரையிறங்கியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி திட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து ஒரே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி அளவுகள் இதுவாகும்.

Related posts

ஆயிரம் ரூபாய் இல்லையேல் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும் – திகாம்பரம்

admin

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் 75 திருத்தங்கள் – அமைச்சர் பந்துல

Rajith

யாழில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

admin

Leave a Comment