இலங்கை பிரதான செய்திகள்

இராணுவ உடையை ஒத்த உடை, பொருட்கள் உட்பட தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த நபர் கைது

வீடொன்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த உடையுடன் கூடிய பொருட்களை பெரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியை சேர்ந்த 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(10.07.2021) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் அடங்கிய பொருட்கள் உட்பட 2 தோட்டாக்களும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரல் மீட்கப்பட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன்  சவளக்கடை பொலிஸார் சந்தேக நபரிடம்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் தமையனின் காதை கடித்து பதம்பார்த்த தம்பி!

Rajith

மாத்தளை வைத்தியசாலையில் மேலும் சிலருக்கு கொரோனா!

admin

புரெவி புயல் – யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை

admin

Leave a Comment