இந்தியா

யாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம், அம்பாறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர்கள் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு மாவட்டம் பிலியந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்போவில வடக்கு கிராம சேவகர் பிரிவின் கரதியான கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மாதாந்த போக்குவரத்து கட்டண உயர்விற்கு ஸ்டாலின் கண்டனம்

admin

நீட் தேர்வு: உயிரிழந்த மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

admin

இந்தியப் பொருளாதாரம் எழுநூறு இலட்சம் கோடி ரூபாயை எட்டும்- ராஜ்நாத் சிங்

admin

Leave a Comment