இந்தியா

ஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது

ஜம்மு – காஸ்மீர் பாண்டிபோரா பகுதியில் ஆயுதத்துடன் தீவிரவாதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த தீவிரவாதி லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாத அமைப்பை சார்ந்தவர் என பாண்டிப்புர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாண்டிப்பூர் – ஹஜின் பகுதியில் பொலிசார்  மற்றும் பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வரும் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது தீவிரவாதியின் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை  மீட்கப்பட்டுள்ளன.

மோசமான நடவடிக்கைகளுக்காக ஹஜின் நகரத்தை நோக்கி தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்காணிக்கட்டு வந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன் போது தன்னை முசம்மில் ஷேக் என்று அடையாளப்படுத்தியுள்ளார். இவரிடமிருந்து சீன தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகளும் மீட்கப்பட்டன.

பாதுகாப்பு தரப்பினரின் தகவல்களின் படி கைது செய்யப்பட்டுள்ள முசம்மில் ஷேக் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கார் ஈ- டாய்பா வில் செயற்பாட்டாளர் என்பதுடன் ஹஜின் நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்துள்ளதாக விசாணைகளின் போது தெரிய வந்துள்ளது.

Related posts

எனக்கு ஏதும் நேர்ந்தால் மோடியே காரணம்: ஹசாரே

admin

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

admin

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர் இந்தியர்கள் சிறந்த வரவேற்பு

admin

Leave a Comment