இலங்கை பிரதான செய்திகள்

ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப் படவுள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படும்.
அதன்படி, நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.
மிக விரைவில் பாடசாலைகளைத் திறக்கும் நோக்கில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் முதற்கட்டமாக பாடசாலைகளைத் திறப்பதற்காக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள், அரச பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களைத் திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

48 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை – மேலும் மூவர் உயிரிழப்பு

admin

குற்றச்சாட்டுகளில் இருந்து வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி விடுதலை – மேல் நீதிமன்றம்

admin

யாழ் மாவட்டத்தில் மேலும் பாடசாலைகளுக்கு பூட்டு

admin

Leave a Comment