இலங்கை

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் காணப்படும் பகுதிகளாக மாளிகாவத்தை, தெமட்டகொட, கொழும்பு வடக்கு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு நகரிலேயே டெல்டா கொரோனா வைரஸுனால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அண்மையில் கொழும்பு நகரில் மாத்திரம் 11 பேர் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நோயாளர்களுடன் தொடர்பினை பேணியவர்களும்  அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்

Rajith

பெற்றோல் – சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

Rajith

மஹிந்த ராஜபக்ஷவிடம் CID யினர் வாக்குமூலம்

Rajith

Leave a Comment