சினிமா

கூகுள் குட்டப்பா திரைப்பட டீசர் வெளியீடு!

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியானது.

கூகுள் குட்டப்பா எனும் பெயரில் தமிழில் ரீமேக்காகி வரும் கேரளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துவருகிறார்.

பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரின் துணை இயக்குநர்கள் சரவணன் மற்றும் சபரி இந்தத் திரைப்படத்தை இயக்குகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

Related posts

ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

admin

ஹிந்தி மொழியாக்கத்தில் வெளியாகிறது ‘கைதி’ திரைப்படம்

admin

பிக்பாஸ் கவினை கேவலமாக பேசிய தொகுப்பாளர்- டென்ஷனாகி மைக்கை தூக்கி எறிந்த சீரியல் நடிகர்

admin

Leave a Comment