இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்காக நீதி கோரியும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் முகமாகவும் கடந்த 12 வருடங்களாக சுழற்சி முறைல் பல போராட்டங்களை உறவுகள் முன்னெடுத்துவருகின்றனர்.

இருப்பினும் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்களும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.

Related posts

பாதுகாப்பு முன்னுரிமைகளுடன் 73வது சுதந்திர தினம் நடைபெறும்

admin

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் “தாய்மை” கருவளச்சிகிச்சை..!!!

Rajith

வவுனியாவில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் – வைத்திய தம்பதியினர் காயம்!

admin

Leave a Comment