இந்தியா

தமிழகத்தில் பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு!

தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி  9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், மீண்டும் பாடசாலைகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இதன்படி புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளனின்படி, மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கும் வகையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவுள்ளதாக தமிழக முதலலைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனைக் கருத்தில் கொண்டே பாடசாலைகள், கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேநேரம் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், அந்த மாநிலத்தில் வரும் மாணவர், மாணவியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கருத்துக்கணிப்பு முடிவுகள்: பிரதமர் மோடிக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து

admin

அபிஜித் பானர்ஜியின் பொருளாதார அறிக்கை மத்திய அரசுக்கு குற்றவுணர்வை தரவில்லையா? – பா.சிதம்பரம் கேள்வி!

admin

ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை – சுஷ்மாவை சந்திக்கிறார் ஜாவத் ஷரீப்!

admin

Leave a Comment