விளையாட்டு

டி-20 உலகக் கிண்ண இந்திய அணி இதோ…

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆலோசகரான மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டி-20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பில்,

விராட் கோலி தலைமையில், ரோகித் சர்மா (துணை தலைவர்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், இஷான் கிஷன் உள்ளனர்.

உலகக் கிண்ண டி-20 இந்திய அணியில் அணியில் ஷிகர் தவான், சஹால், தமிழக வீரரான நடராஜன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

டி20 உலகக் கிண்ண – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. டுபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது.

Related posts

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான தொடக்கமே வெற்றிக்கு காரணம்: சகிப் ஹல் ஹசன்

admin

ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ண போட்டி – இலங்கை குழாம் அறிவிப்பு

Rajith

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது குறித்து கோஹ்லி கருத்து!

admin

Leave a Comment