விளையாட்டு

ஆப்கானிய பெண்கள் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டால் அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியை இரத்து செய்யும்

நவம்பர் மாதம் இடம்பெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகிறது.

தமது நாட்டு பெண்கள் எந்த விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தலிபான்கள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தலிபான் ஆட்சியில் பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படாவிட்டால் போட்டியை இரத்து செய்ய தீர்மானிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதனால் உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை எப்போதும் அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை ஊக்குவிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரே அணியாக இருந்தாலும், பெண்கள் கிரிக்கெட் அணியைக் கொண்டிருக்கவில்லை.

கடந்த ஆண்டு, தலிபான்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒரு சர்வதேச அணியை உருவாக்க விரும்புவதாக தெரிவித்து பெண்களுக்கான முதல் ஒப்பந்தங்களை அறிவித்தது.

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டுவர மீளாய்வு செய்ய ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது குறித்தும் விசேட அறிக்கையாளர் மேரி லாலர் உட்பட ஏழு ஐ.நா. அறிக்கையாளர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைது இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டமையானது விசாரணை இன்றி நீண்ட நாள் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விசேட அறிக்கையாளர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கையாளர் உட்பட ஏழு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

Related posts

ஆறாவது முறையாகவும் தங்கப் பாதணி விருதை வென்று லியோனல் மெஸ்ஸி சாதனை!

admin

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் இடைவிலகுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு

admin

போக்ஸ்- டொம் கர்ரனின் நிதான துடுப்பாட்டத்தின் துணையுடன் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!

admin

Leave a Comment