உலகம்

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,654பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,654பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 29ஆயிரத்து 300பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 106பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 38ஆயிரத்து 351பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 63ஆயிரத்து 843பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்!

Rajith

ஹிட்லர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் விற்பனை

admin

பிலிப்பைன்ஸில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு – ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அச்சம்!

admin

Leave a Comment