இலங்கை விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, நேற்று கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்த, 121 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 14.4 ஓவர்கள் நிறைவில், விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்காக 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Related posts

தமிழர்களின் நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது?

admin

தமிழர்களின் பிரச்சினைக்கு முஸ்லிம் தலைவர்களும் குரல்கொடுக்க வேண்டும் – மனோ

admin

சூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல்

admin

Leave a Comment