இலங்கை

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கிய மூன்று துறவிகள் கைது

பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறப்படும் துறவி உட்பட மூன்று துறவிகள் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கியமைக்காக கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.சினோபாம் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதற் காக கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்ற மூன்று துறவிகளால் குறித்த பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தாக்கப் பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறப்படும் ஒரு துறவி உட்பட மூன்று துறவிகளால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.சந்தேகத்திற்குரிய துறவிகள் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சி அவசியம் – ரணில்

admin

இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு: பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் – பிரதமர் இடையில் சந்திப்பு

admin

கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!

admin

Leave a Comment