இலங்கை

பதவியை ராஜினாமா செய்தார் லொஹான் ரத்வத்தே

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தமது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் தற்போது நடந்துவரும் சூழ்நிலையில், அமைச்சரின் இந்த செயற்பாடு இலங்கை அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அவரை உடனடியாக பதவிவிலக அரச மேல்மட்டம் கோரி இருந்தது

இதன்படி தனது இராஜினாமா கடிதத்தை லொஹான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

லொஹானின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

யாழில் பயணத்தடை காலத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தலில்..!!!

Rajith

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம்

admin

ஜனாதிபதி இன்று விசேட உரை ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில்

Rajith

Leave a Comment