இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

மிக விரைவில் நடவடிக்கை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு நாமல் அதிரடி அறிவிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வேலைத்திட்டங்களை தற்போது எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே இருந்த அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி வாக்கு கேட்டார்கள், மக்களும் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் எதுவும் இடம்பெறவில்லையென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் நாமல் ராஜபக் மேற்கண்டவாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நாங்கள் 16 கைதிகளை விடுதலை செய்துள்ளோம். சில இளைஞர்கள் முகநூலில் பதிவு போட்டதாக கைது செய்யபட்டுள்ளனர்.

அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு நீதிபதிகளுடன் பேசி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் சேர்வதற்கும் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இளைஞர்களை சிறையில் வைத்திருப்பது எமது எதிர்பார்ப்பு இல்லை. இளைஞர்கள் இந்த நாட்டின் முக்கியமான நபர்கள் அவர்கள் புனர்வாழ்வளித்து மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

தற்போது ஒரு அம்மா கூட இந்த விடயம் தொடர்பாக என்னோடு பேசியிருந்தார், நான் நினைக்கின்றேன் மிக விரைவில் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று, அத்தோடு மண் வியாபரிகள் தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது, அதற்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் பிடித்த விடயம் எமது பரம்பரை பெயரை சொல்வதே, எதிர்கட்சிக்கும் விருப்பம் எமது பெயரை பாவிப்பது, காரணம் அப்போதுதான் இவர்களது செய்திகள் ஊடகங்களில் வரும் என்பதற்காக எமது அரசாங்கம் நீதிக்கு விரோதமான எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காது.

எமது பரம்பரை பெயரை எவரேனும் பாவித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால், பொலிஸில் சென்று முறைப்பாடு இடுங்கள், சாட்சிக்கு நான் வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Related posts

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியீடு – பதிலை வழங்கியது அரசாங்கம்

admin

நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

Suki

தெற்காசியாவில் செல்வாக்கை விரிவுபடுத்த இந்திய பிரச்னைகளை பயன்படுத்துகிறதா சீனா?

Suki

Leave a Comment