இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

மிலேச்சத்தனமாக காட்டுமிராண்டித்தனமாக மக்களின உணர்வுகளை மதிக்காமல் புண்படுத்தும் விதமாக சுடரை காலால் தட்டி அணைத்தார்கள் காவல்துறையினர்- செல்வராஜா கஜேந்திரன்

காவல்துறையினர் மிலேச்சதனமாக காட்டுமிராண்டித்தனமாக எங்கள் மக்களின உணர்வுகளை மதிக்காமல் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக சுடரை காலால் தட்டி அணைத்தார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்
பிணையில் விடுதலையான பின்னர் இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தியாகதீபம் திலீபனை நினைவுகூர்ந்து சுடரேற்றுவதற்கு நான் சென்றவேளை அந்த இடத்திலிருந்த பொலிஸார் தடுத்தார்கள், நான் அவர்களிடம் கேட்டேன் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கின்றதா என ? அவர்கள் நீதிமன்ற உத்தரவு இருக்கின்றது என தெரிவித்தார்கள்.
ஆனால் அவர்கள் அதனை காண்பிக்கவில்லை நான் மீண்டும் மீண்டும் நீதிமன்ற தடை உத்;தரவு இருந்தால் காண்பியுங்கள் எனமீண்டும் மீண்டும் கேட்டேன்.
நீதிமன்ற உத்தரவு இருந்தால் நாங்கள் அதனை மதிக்க தயார் அவ்வாறான உத்தரவு இல்லாவிட்டால் நீங்கள் எங்கள் உரிமையை மீறுகின்ற செயல்பாட்டினை முன்னெடுக்கின்றீர்கள் என நான் தெரிவித்தேன்.
ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தல் உத்தரவு எதனையும் என்னிடம் காண்பிக்கவோ தரவோயில்லை.
அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில் நான் தூபி இருந்த இடத்திற்குஅருகில் சுடரேற்றினேன்.
அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் மிலேச்சதனமாக காட்டுமிராண்டித்தனமாக எங்கள் மக்களின உணர்வுகளை மதிக்காமல் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக சுடரை காலால் தட்டி அணைத்தார்கள் அதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
நினைவுகூறுவதற்கான உரிமை எங்கள் அனைவருக்கும் உள்ளது அதுவும் எங்களுடைய உரிமைக்காக 12 நாட்கள் நீராகாரம் அருந்தாமல் உயிர்நீத்த எங்கள் அண்ணணை நினைவுகூறுவதை தடுப்பதற்கு இவர்களிற்கு எந்த உரிமையும் கிடையாது.

ஆனால் துரதிஸ்டவசமாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இங்குள்ள காவல்துறையினர் தமிழர்களை அடக்கி ஒடுக்கிய சிங்களபௌத்த மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காக தான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்களே தவிர எந்த ஒரு இடத்திலும் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதற்கு அவர்கள் தயாராகயில்லை.
இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஐநா வரை சென்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகின்றோம் புலம்பெயர் தமிழர்களுடன் பேசப்போகின்றோம், தீர்க்கப்போகின்றோம் என தெரிவிக்கின்றார்.
ஆனால் எங்களுடைய உறவினர்களை எங்களுடைய உரிமைக்காக போராடியவர்களை நினைவுகூறுவதற்கான உரிமையை அவர்கள் மதிக்க தயாராகயில்லை.உலகத்திலேயே மிகவும் கேடுகெட்ட படை என்றால் அது இந்த ஸ்ரீலங்கா படையாகத்தான் இருக்க முடியும் அந்த படையின் தளபதியாகயிருந்த ஒருவரின் தலைமையிலே நினைவுச்சுடரை காலால் தட்டி வீழ்த்துவது என்பது ஆச்சரியமளிக்கும் விடயமில்லை இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கி;ன்றோம், என தெரிவித்துள்ளார்.

நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்-

இப்போது எங்களை இங்கு கொண்டு வந்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் தனியாகத்தான் சுடரேற்ற அந்த பகுதிக்கு சென்றேன் அப்போது அந்த வழியால் வந்த எங்கள் கட்சி சார்ந்தவர்கள் அங்கே நான் நின்று பொலிஸார் என்னுடன் வாக்குவாதப்படுவதை பார்த்த பின்னர் அந்த இடத்திற்கு வந்து என்ன நடக்கின்றது என நியாயம் கேட்க முற்பட்டவேளை அவர்களையும் சேர்த்து கைதுசெய்துகொண்டு வந்து நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி தவணையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி ஒருவனாக நான் அந்த இடத்திற்கு சென்றதை கூட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

லொகான் ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் மீது கைத்துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய நிலையிலே இன்றுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை ஏன் ஏன்றால் அவர் சிங்களவர் – 

நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும் லொகான் ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் மீது கைத்துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய நிலையிலே இன்றுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை.
ஏன் அவர் பெரும்பான்மையின சிங்களவர்.
ஆனால் நாங்கள் எங்கள் உரிமைக்காக உயிர்நீத்த அண்ணண் திலீபனிற்கு நினைவஞ்சலி செலுத்த முற்பட்டவேளை கைதுசெய்து, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகயிருந்தபோதும், தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதற்கு எந்தவித மரியாதையும் இல்லாமல் தான் கைதுசெய்து கொண்டுவந்து மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
அவர்கள் என்ன பெரிய குற்றம் செய்தாலும் அவர்களை பாதுகாப்பதற்காக அவர்களிற்காக இந்த அரசாங்கம் காவல்துறையும்.செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது காவல்துறையும் அதற்காகதான் இருக்கின்றது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் முன்னிலையில் தான் அவர் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையை விடுத்திருந்தார்.
ஆனால் நாங்கள் நினைஅஞ்சலி செலுத்த முற்படுகின்ற போது இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றால் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ளது- மகிந்த ராஜபக்சவையும் கோத்தபாய ராஜபக்சவையும் இந்த இராணுவத்தினரையும் போர்குற்ற விசாரணையிலிருந்து தடுத்து சர்வதேச விசாரiணைகளில் இருந்து தடுத்து உள்ளக விசாரணை என்ற பெயரில் பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் அவர்களை பாதுகாத்து அவர்கள் பதவியேறுவதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்ததாலேயே அவர்கள் இந்த ஆட்டத்தை ஆடுகின்றார்கள்.

Related posts

பிரதேசசபை உபதலைவர் மீது தாக்குதல் – உறுப்பினர்கள் இருவர் கைது

Suki

யாழில் வேப்ப மரத்தால் இளைஞனுக்கு நேர்ந்த கதி

Editor2

குளவி தாக்கியதில் 17 பாடசாலை மாணவர்கள் காயம்

Suki

Leave a Comment