இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

அரசாங்கத்தை விட்டு வெளியேற்றினாலும் எம்மால் இயலுமான வரை செய்யக்கூடியதைச் செய்வோம்- விமல்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான முடிவு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணையத் தீர்மானித்துள்ளனர்.
குறித்த ஒப்பந்தத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்து கொண்டு விமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளின் ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு நிரந்தரமாக வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அதனைத் தடுக்க அரசங்கத்திற்குள்ளே இருந்தாலும் வெளியேற்றினாலும் எங்களால் இயலுமான வரை செய்யக் கூடியதைச் செய்வோம் என்றும் பொதுமக்கள் உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசாங்கம் செய்யும் போது எதிர்ப்பு தெரிவிப் பதும் எங்களின் அரசாங்கம் தவறு செய்தால் சத்தம் போடாமல் அமைதியாக இருக்க வேண்டுமா என்றும் யார் செய்தாலும் தவறு தவறு தான் என்றும் ஏனைய அரசாங்கம் செய்வதை விட எங்களின் அரசாங்கம் செய்வது மிகவும் பாரதூரமான பிழை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பொதுமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்து விட்டார்கள் என்றும் இந்த நாட்டின் புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அப்பாவி கிராம பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித் துள்ளனர் என்றும்  இந்தக் கொடுமைக்கு இடம் வழங்காது தவிர்க்குமாறு  அவரிடம் நாங்கள் கூறுகிறோம் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு ஏற்படக் கூடிய கொடுமையை உடனடியாக நிறுத்த வேண்டும்.  உள்நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொண்ட குத்தகையை சரியான முறையில் முன்னெடுத்துச் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள் ளார்.
மக்களாணையை கொள்ளையடிக்க முயற்சிக்கும் தரப்பினரது நோக்கத்தை தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

Suki

முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னம் இடித்து அழிக்கப்பட்டமைக்கு மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடும் கண்டனம்

admin

பைஸர் தடுப்பூசிகள் ஒரு தொகை நாட்டை வந்தடைந்தன

Suki

Leave a Comment