இலங்கை

சுகாதார தரப்பினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந்துரை செய்வதைத் தவிர சுகாதாரத் துறைக்கு வேறு வழியில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்களின் போராட்டங்களால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
தற்போது சுகாதார வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை எனவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் ஒரே நாளில் அதிகளவானோருக்கு கொரோனோ தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நேற்றைய தினத்தில் 568 பேருக்கு கொரோனா

admin

கோவிட் நான்காவது தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தகவல்.

Suki

சதொசவில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இல்லையென குற்றச்சாட்டு.

Suki

Leave a Comment