இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.நயினாதீவின் வடக்கு பகதியில் மினி சூறாவளி

யாழ்.நயினாதீவின் வடக்கு பகதியில் இன்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் இதனால் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தொிவித்திருக்கிறார்.

யாழ்.மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் இன்று மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில் வீசியமினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாண, கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

Frank Vithusan

வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

admin

மீதியுள்ள அரசியில் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?

Suki

Leave a Comment