இலங்கை கிளிநொச்சி பிரதான செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

யாழில் சம்பளத்துக்கு பிச்சை எடுத்தோர் கைது

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் நகர் பகுதிகள், கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வந்து யாசகம் பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

முறிகண்டி, யாழ்.நகரம், சாவகச்சோி, நல்லுார் பகுதிகளில் கடந்த சில நாட்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த யாசகர்கள் நடமாட்டம் காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்றய தினம் யாழ்.சாவகச்சோி பகுதியில் இவ்வாறான யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த யாசகம் பெறுபவர்கள் வவுனியா ஈரப்பொிய குளம் மற்றும் வேறு சில மாவட்டங்களில் இருந்து வருகைதருவதாக கூறுவதுடன், பெண்கள் கர்ப்பவதிகளாகவும், சிறு குழந்தைகளை கையில் வைத்திருப்பவர்களாகவும் உள்ளனர்.

இதேவேளை சாவகச்சோி நகரில் யாசகம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி உரிமையாளர் ஒருவர் தினக்கூலிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து யாசகர்களை அழைத்துவருவதாக அண்மைய நாட்களில் பல இடங்களில் கைது நடவடிககை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு யாசகம் பெறுவோர் தாம் யாசகமாக பெற்றதை விடுதி உரிமையாளரிடம் ஒப்படைத்த பின்னர் அதற்காக தினக்கூலி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முடக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளல்

Suki

படகு விபத்து தொடர்பில் மூவர் கைது

Suki

இரும்பு விலையின் சடுதியான அதிகரிப்பால் கட்டட நிர்மாணத்துறையினர் அசௌகரியம்.

Suki

Leave a Comment