இலங்கை விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளும் தகுதிகாண் மூலம் தெரிவாகும் ஒரு நாடுமாக 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த வருடம் ஆசிய கிண்ண கிரிக்கெட் இருபது 20 கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளும் இம்முறை போட்டியில் பங்குபற்றவுள்ளன. ஆறாவது நாட்டைத் தெரிவு செய்யும் தகுதிகாண் சுற்று ஆகஸ்ட் 20ஆம் திகதியிலிருந்து நடைபெறும்.

தகுதிகாண் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய 4 நாடுகள் விளையாடவுள்ளன.

இப் போட்டி தொடர்பான விபரங்களும் திகதிகளும் கொழும்பில் சனிக்கிழமை (19) நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் என்ற இரண்டு வகை கிரிக்கெட் போட்டி மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.

50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் வருடத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் அணிக்கு 50 ஓவர்களாகவும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் வருடத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் அணிக்கு 20 ஓவர்களாகவும் நடத்தப்படும்.

இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி கொவிட் – 19 காரணமாக இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு இந்த வருடம் நடத்தப்படவுள்ளது.

Related posts

அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரை சமநிலை செய்தது ஆப்கானிஸ்தான் அணி!

admin

உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து!

admin

ரயிலில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

Rajith

Leave a Comment