இலங்கை

கடலில் மூழ்கிய ரஸ்ய முதன்மை ஏவுகணை கப்பல் உக்ரைன் படையினராலேயே தாக்கப்பட்டதாக தகவல்!

உக்ரைனின் இரண்டு நெப்டியூன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டமை காரணமாகவே ரஸ்யாவின் மொஸ்க்வா ஏவுகணை கப்பல் தீப்பற்றி எரியுண்டு பின்னர் கடலில் மூழ்கியதாக பெயர் குறிப்பிட விரும்பாத  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ரஸ்ய கடற்படையினர் பலர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாகவும் அவர்கள் குறிப்பி;ட்டுள்ளனர்.

ரஸ்ய கருங்கடல் கடற்படையின் முதன்மையான மொஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த கப்பல் மூழ்கியதாக ரஸ்யா கூறுகிறது.

510 பணியாளர்கள் கொண்ட இந்த போர்க்கப்பல் ரஸ்யாவின் இராணுவ சக்தியின் அடையாளமாக இருந்தது,

அத்துடன் உக்ரைன் மீதான அதன் கடற்படை தாக்குதலுக்கு அதுவே முதன்மையான நின்று செயற்பட்டது.

இந்தநிலையில் கப்பலின் தலைவர் தீவிபத்தில் இறந்ததாக உக்ரைனின் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது இந்த கப்பல் மூழ்கிய பி;ன்னரே உக்ரைன் மீது ரஸ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

Related posts

தாய் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துகொண்ட மகன்!

Suki

இலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி!

admin

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

admin

Leave a Comment