கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பாதை அவெரிவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்டுநாயக்க அவெரிவத்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்படலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.