இந்திய கடன் வரியின் கீழ் இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இன்று (29) கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடையும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வைத்தியசாலைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இந்த மருந்துகளை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்கான மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.