இங்கிலாந்து நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 கோடிக்கும் அதிக பெறுமதியான இரு அதிசொகுசு ரக வாகனங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு-புறக்கோட்டை பகுதி வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 கோடிக்கும் அதிக பெறுமதியான இரு அதிசொகுசு ரக வாகனங்கள், 5 வாகன உதிரி பாகங்கள் மற்றும் 1000 கிலோ கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்கிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலனின் நிறை சுமார் 1000 கிலோ கிராம் என்றும் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.