இந்தியா இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

தமிழகம் செல்ல முயன்றவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர், கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

களனிதிஸ்ஸயில் இன்று மாலையுடன் மின்னுற்பத்தி இல்லை!

Rajith

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Rajith

கடதாசி அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ள இலங்கை மத்திய வங்கி

Rajith

Leave a Comment