இலங்கை

ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பு.

தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கொள்கை ரீதியாக இணங்கி கடந்த வாரம் கட்சித்தலைவர்களுக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள், ஏனைய கட்சிகள் இல்லாத கூட்டமொன்றை நடத்துவதற்கு தமது இணக்கப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தன.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக குறித்த குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவது குறித்தும் ஆராயப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு சூழலில் இன்றைய தினமும் முக்கியமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


Related posts

வட மாகாணத்தை புரட்டி எடுக்கும் கொரோனா!

Suki

ரோஹித மீதான இலஞ்ச ஊழல் வழக்கு பெப்ரவரியில் விசாரணைக்கு !

admin

21ம் திகதி 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும்

Suki

Leave a Comment