விளையாட்டு

சம்பியன்ஸ் லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரியல் மட்ரிட் அணி!

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது லெக் அரையிறுதிப் போட்டியில், ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது.

சாண்டியாகோ பெர்னாபு விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ரியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிட்டி அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரியல் மட்ரிட் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் ரியல் மட்ரிட் அணி சார்பில், றொட்ரிகோ 90ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 91ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

மேலும், நட்சத்திர வீரரான கரீம் பென்ஸிமா 95ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.

மன்செஸ்டர் அணி சார்பில், றியாட் மஹரெஸ் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

மொத்தமாக, இரண்டு லெக் போட்டிகளின் முடிவில், ரியல் மட்ரிட் அணி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதல் லெக் போட்டியில், 4-3 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிவரும் மே 29ஆம் திகதி நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், ரியல் மட்ரிட் அணி, லிவர்பூல் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Related posts

பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கையின் பத்து முன்னணி வீரர்கள் விலகல்!

admin

இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இலங்கை அணி தயார்

admin

இலங்கை வரும் சிம்பாப்வே அணி

Rajith

Leave a Comment