இலங்கை

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று ( சனிக்கிழமை ) அனுஷ்டிக்கப்பட்டது.

நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில் காலை 9.30 மணியளவில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர் .

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆடி மாதம் 9ம் திகதி அரச விமான தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு – மக்களே அவதானம்

Rajith

நீர் கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு.

Rajith

கல்கிசை சிறுமி விவகாரம்: 4 பேர் பிணையில் விடுதலை

Rajith

Leave a Comment