இலங்கை

டெல்லியில் பாயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் !

ந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் முதலாம் மாடியில் உள்ள சிசிடிவி கமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீப்பரவவியதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

எனினும், தீப்பரவலுக்கான உறுதியான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related posts

பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

admin

கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் சந்திப்பு!

Rajith

பாடசாலைகளை திறப்பதா? இல்லையா?

Rajith

Leave a Comment