இலங்கை

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இதற்கு முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

Rajith

ஜொன்ஸ்டன் உட்பட 5 பேர் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டனர்

Rajith

நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டிற்கு செய்த பாரிய துரோகம்

admin

Leave a Comment