இலங்கை

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – சனத் நிஷாந்த கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனத் நிஷாந்த உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

Rajith

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

admin

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!

admin

Leave a Comment