இலங்கை விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மாலிங்க நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க, செயற்படவுள்ளார்.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்றுமுடிந்த ஐ.பி.எல். தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக தனது பணியினை தொடர்ந்திருந்த மாலிங்க, தற்போது இலங்கை அணியுடன் இணைந்துள்ளார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, மூன்று ரி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக நடைபெறும் முதல் ரி-20 எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

கொரோனா பாதித்த மனைவியை கொன்று விட்டு அடுத்த திருமணத்திற்கு தயாரான கணவர்

Rajith

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில் வெடி கொழுத்தி கொண்டாடிய ஆதரவாளர்கள்

Rajith

நிந்தவூரில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்களுடன் மூவர் கைது!

admin

Leave a Comment