உலகம்

யுக்ரைனின் கிழக்கு நகர் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவிப்பு

யுக்ரைனின் கிழக்கு நகரான லைசிசான்ஸ்க் (Lysychansk) தங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக யுக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்புகளும் அறிவித்துள்ளன.

யுக்ரைன் படைகள் அங்கு ரஷ்ய தாக்குதலுக்கு பதிலளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பகுதி இதுவரையில் ரஷ்யாவால் கைப்பற்றப்படவில்லை எனவும் யுக்ரைன் அறிவித்துள்ளது.

எனினும் ரஷ்ய தரப்பினர் லிசிசான்ஸ்க் நகரில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

குறித்த நகரின் வீதிகளில் தங்களது இராணுவம் மற்றும் தேசிய கொடியுடனான காணொளிகளை ரஷ்ய தரப்பு வெளியிட்டுள்ளன.

லிசிசான்ஸ்க் நகரம் அண்மையில் ரஷ்ய தரப்பினால் கைப்பற்றப்பட்ட செசெரோடொனெட்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பித்தமையில் இருந்து இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

அத்துடன் 12 மில்லியன் மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

சூடானில் வெள்ளப்பெருக்கு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

admin

அமெரிக்கப்படையினரை இலக்கு வைத்து தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு!

admin

எத்தியோப்பியாவில் வான் வழித் தாக்குதல்கள்

Rajith

Leave a Comment