உலகம்

பாகிஸ்தானில் இராணுவத்தை விமா்சித்த மூத்த பத்திரிகையாளா் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் இராணுவத்தை விமா்சித்த 73 வயது பத்திரிகையாளா் அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்டமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி வரும் அயாஸ் அமீா் என்ற நபர், நாட்டின் அதிகார மையமாகத் திகழும் இராணுவத்தின் உயரதிகாரிகள் வீட்டுமனை விற்பனையாளா்களாக செயல்படுவதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் விமா்சித்தாா்.

இந்த நிலையில், அவா் பணி முடிந்து சனிக்கிழமை வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த சில நபா்கள் அவரது காரை வழிமறித்தனா். பின்னா் அவா் மீதும் அவரது காா் சாரதி மீதும் தாக்குதல் நடத்தினா். மேலும், அயாஸ் அமீரின் ஆடையையும் அந்த நபா்கள் கிழித்துவிட்டு தப்பியோடினா்.

வயது முதிா்ந்த செய்தியாளா் தாக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்துவதன் மூலம் பாசிஸத்தை நோக்கி பாகிஸ்தான் நகா்ந்து வருவதாகக் குற்றம் சாட்டினாா்.

Related posts

சியோலில் ட்ரம்ப் – மூன் ஜே-இன் சந்திப்பு

admin

இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்!

admin

பிரெக்ஸிற்றின் மூலமான பாதிப்புகளை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை: ஜேர்மன் அமைச்சர்v

admin

Leave a Comment