இந்தியா இலங்கை சினிமா

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிவரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிவரும் திரைப்படம் ’ஜவான்’.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கெளரிகான் தயாரிப்பில், இந்தப் புதிய படத்தை ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வெளியிட உள்ளது.இந்த படம் அடுத்தாண்டு ஜூன் 2ஆம் திகதி வெளியாகும் என படக்குழு கடந்த மாதம் டைட்டில் வீடியோ மூலம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லனாக நடிப்பதற்கு முதலில் படக்குழு, நடிகர் ராணாவை அணுகியதாகவும் அவர் வேறு படத்தில் நடிப்பதால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவு ஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பை ஷாருக்கான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது

Related posts

அனுராதபுரத்தில் கோர விபத்து – தாயும் மகளும் பலி – CCTV காணொளி

Rajith

யேமன் உள்நாட்டுப் போரில் ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளனர்

admin

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு!

admin

Leave a Comment