இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 21,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

இந்திய கடன்திட்டத்தின் கீழ் 21,000 மெற்றிக் தொன் உரம் இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட 44,000 மெற்றிக் தொன் உரத்தின் முதல் தொகுதி கப்பல் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்தது.

இலங்கை உரக் கம்பனி லிமிடெட் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி ஆகியவற்றினால் குறித்த உரம் தற்போது விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

உர விநியோகத்தில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்ய எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்று (18) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் மாபெரும் இரத்ததான முகாம்

Rajith

பல்கலைக்குள் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை இணைக்க தீர்மானம்

admin

பிரதமரின் சர்வதேச மனித உரிமைகள் தின செய்தி

admin

Leave a Comment