இலங்கை பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

50 கண்ணீர் புகை குண்டுகளுடன் ஒருவர் கைது

பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் ஜூலை மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றை தாக்கி அவர்களிடமிருந்து 50 கண்ணீர் புகை குண்டுகளை திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ கருத்து தெரிவிக்கையில்,

பொல்துவ  சந்திக்கு அருகில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் குழுவொன்று முச்சக்கர வண்டியில் 50 கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றிச் சென்ற போது முச்சக்கரவண்டியை வழி மறித்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கி அவர்களிடமிருந்து 50 கண்ணீர் புகை குண்டுகள் போராட்டக்காரர்களால் திருடப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒபேசேகர, புர நாணயக்கார மாவத்தையில் வைத்து வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,பொரளை, கோதமி பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் என்றும் அவரது தங்குமிட அறையில் 50 கண்ணீர் புகை குண்டுகளை மறைத்து வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையில் மேலும் 570 பேர் பூரணமாக குணம்

admin

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு

Suki

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் – கெஹலிய

Suki

Leave a Comment