இலங்கை பிரதான செய்திகள்

எரிபொருளுக்காக போலி இலக்கத்தகடு பொருத்தி வந்தவர் பொலிஸாரால் கைது!

நோர்வூட் நகரிலுள்ள கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பெற்றோல் பெறுவதற்காக, மோட்டார் சைக்கிளில் போல இலக்கத்தகடு பொருத்திக் கொண்டு வந்த ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி 3300 லீற்றர் பெற்றோல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலக்கத் தகட்டின் கடைசி இலக்கமான 0 முதல் 3 வரையிலான இலக்கமுடைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தேகநபர் தான் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத் தகட்டை காட்டி எரிபொருள் பெற முற்பட்ட போது, ​​அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த நோர்வூட் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன் இலக்கத் தகட்டில் போலி இலக்கத்தகடு ஒட்டப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை சரிபார்த்ததில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நோர்வூட் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், போலி இலக்கத் தகடுகளை காட்டி மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கொரோனா தொற்றால் 4பேர் உயிரிழப்பு

Frank Vithusan

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் – ரோஹித அபேகுணவர்தன

admin

யாழில் கொரோனா பரவல் அதிகரிப்பு – இது ஆரோக்கியமானது அல்ல!

Rajith

Leave a Comment