இலங்கை உலகம் பிரதான செய்திகள்

கோட்டாபயவை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் முறைப்பாடு!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரில் ஈடுபட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யக் கோரி மனித உரிமைக் குழு ஒன்று,சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் புகார் அளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புத் தலைவராக இருந்தபோது ஜெனீவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு (International Truth and Justice Project) தெரிவித்துள்ளது .தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட மேற்படி அமைப்பு உலகளாவிய அதிகார வரம்பின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிங்கப்பூரில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பல மாதங்கள் தொடர்ந்த அமைதியின்மைக்குப் பிறகு சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டார்.
மேற்படி வழக்கு குறித்து ரொய்ட்டர்ஸ் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொண்டுள்ள போதும் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் ராஜபக்ஷவை சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ போர் குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னர் கடுமையாக மறுத்துள்ளதையும் ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

1,187 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

admin

மேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகும் சுகாதார உத்தியோகத்தர்கள்

Rajith

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் பதவி நீக்கம்

admin

Leave a Comment