இலங்கை யாழ்ப்பாணம்

விவசாயிகளுக்கு 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் விநியோகம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16,272 மெட்ரிக் தொன் யூரியா உரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.நெல் சந்தைப்படுத்தல் சபை அலுவலகங்கள் ஊடாக உர இருப்புக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இயற்காலத்தில் அதிகளவான உரங்களை கையிருப்பில் பெற்றுள்ளனர்.பொலன்னறுவை விவசாயிகளுக்கு 5,382 மெட்ரிக்தொன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண விவசாயிகள் 956 மெட்ரிக்தொன் உரங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட உர விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.மேலும், தேயிலை தொழிலில் உள்ளவர்களுக்கும் 15,000 மெட்ரிக் தொன் உரம் விநியோகிக்கப்படவுள்ளது.

Related posts

விநியோகஸ்தர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்புவதை நிறுத்துவார்கள் -சமந்த வித்யாரத்ன

Rajith

யாழ்பாணத்தில் காரில் வந்தவர்களிடம் அகப்பட்ட பொருட்கள்

Rajith

சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்களும் தனித்து அமர தீர்மானம் !

Rajith

Leave a Comment