இலங்கைக்கு ஆதரவளிக்க ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் கடன் ஒப்பந்தத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து அனைத்து கடன் வழங்குநர் நாடுகளுடன் கலந்துரையாட ஒன்றிணையுமாறு ஜப்பானிய நிதி அமைச்சர் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கமைய, சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாட ஒன்று கூடுவது முக்கியம் என ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
அவ்வாறான நிலையில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சீனாவின் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது.