இந்தியா இலங்கை சினிமா

வசூலை குவிக்கும் நானே வருவேன் …!

நானே வருவேன் திரைப்படம் வசூலை குவித்து வருவதால் இயக்குனர் செல்வராகவனுக்கு ஆளுயுர மாலையை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அணிவித்துள்ளார்.செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஹாரர் த்ரில்லரில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் தனுஷின் நடிப்பு பாராட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று பின்னணி இசையில் தனுஷ் மிரட்டியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் வழக்கமான படம் போன்று அசத்தலான இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் வசூல் 10.12 கோடியாக உள்ளது. இன்னும் விடுமுறை நாட்கள் வருவதால் இந்த வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் செல்வராகவனை அவரது சந்தித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ஆளுயுர மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Related posts

கோட்டாவுடன் பேச புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிபந்தனை

Rajith

40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று: மக்களுக்கு எச்சரிக்கை!

Rajith

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று வெளியாகிறது!

admin

Leave a Comment