நேற்று வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’.
தென்னிந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவானது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப்படத்தின் விமர்சனத்தின் ஆரம்பத்தில் படத்தை ஆஹா ஓஹோவென பாராட்டி தள்ளும் மாறன் திடீர் ட்விஸ்ட்டாக இதுவரை வந்த விமர்சனம் படத்துக்கு முட்டு கொடுக்குறவங்களுக்கு, இனிமே வர்றது தான் உண்மையான விமர்சனம் என ஆரம்பித்து படத்தை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார் மாறன். படத்தின் எந்த கதாபாத்திரங்களும் அழுத்தமாக எழுதப்படவில்லை என தெரிவித்துள்ளார்.